Enable Javscript for better performance
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துடன் ஷியா முஸ்லிம் தலைவர் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துடன் ஷியா முஸ்லிம் தலைவர் சந்திப்பு

    By DIN  |   Published on : 26th March 2017 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஷியா முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் மௌலானா யாகூப் அப்பாஸ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது ஷியா முஸ்லிம்களுக்கான நல வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
    இந்த சந்திப்புக்குப் பின்னர் அப்பாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன்; எங்களது கோரிக்கைகள் குறித்து ஷியா முஸ்லிம் சட்ட வாரியம் விரைவில் முதல்வரை சந்தித்துப் பேசும்' என்றார்.
    அப்போது அவரிடம், முஸ்லிம் மதத்தில் விவாகரத்துப் பெற பின்பற்றப்படும் தலாக் முறை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அந்த முறை தேவையில்லை' என்றார்.
    அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்த கேள்விக்கு அப்பாஸ் பதிலளிக்கையில், "ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரம் பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்; இதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே ஷியா முஸ்லிம்களின் விருப்பம்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai