சுடச்சுட

  

  உ.பி. முதல்வர் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: இளைஞர் மீது வழக்குப்பதிவு

  By DIN  |   Published on : 26th March 2017 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து, முகநூலில் (பேஸ்புக்) சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  உத்தரப் பிரதேச முதல்வராக பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
  இதனிடையே, ஷாஜாத் அக்ரம் என்பவர் முகநூலில் ஆதித்யநாத் குறித்தும், ஹிந்து மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்ஷித் அகர்வால் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரில், முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும், ஹிந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் முகநூலில் ஷாஜாத் அக்ரம் பதிவுகளை வெளியிட்டதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில், ஷாஜாத் அக்ரம் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 153ஏ (இரு சமூகத்தினர் இடையே பகையை ஏற்படுத்துதல்), 504 (அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின்கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai