Enable Javscript for better performance
ஊழல் தடுப்புப் பிரிவை அமைக்க மணிப்பூர் அரசு முடிவு- Dinamani

சுடச்சுட

    

    மணிப்பூரில் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு அண்மையில் பதவியேற்றது. இந்நிலையில், மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டம் இம்பாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மாநில அமைச்சரும், அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான விஸ்வஜித் கூறியதாவது:
    முதல்வர் பிரேன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    அரசுப் பணியிலுள்ள ஊழல்வாதிகள் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காகவே இந்தப் பிரிவு தொடங்கப்படவுள்ளது.
    இதுதொடர்பாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு பிரத்யேக செல்லிடப்பேசி எண் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனினும், அற்பமான காரணங்களுக்காக புகார் தெரிவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    மேலும், அரசின் 3, 4-ஆம் நிலை பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, நேர்முகத் தேர்வு நடத்துவதை கைவிடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார் விஸ்வஜித்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai