சுடச்சுட

  

  ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
  இந்த செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பர் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:
  ஒடிஸாவில் அண்மையில் நடந்து முடிந்த கிராம ஊராட்சித் தேர்தலில் எதிர்பாராத வகையில் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததற்காக மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்க மோடி, இந்த மாநிலத்துக்கு வருகிறார். ஒடிஸாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தால், வரவிருக்கும் 2019 மக்களவை பொதுத் தேர்தலில் கட்சித் தொண்டர்களுக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் மிகுந்த உத்வேகம் ஏற்படும்.
  கட்சியின் மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பர். மேலும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்துகொள்வர் என்றார் பிரதான்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai