சுடச்சுட

    

    காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பட்கம்போரா பகுதியில் காவல்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு காவல்துறையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai