சுடச்சுட

    

    "கிரேட்டர் நாகாலாந்து' குறித்து முடிவெடுக்கவில்லை: மத்திய அரசு

    By DIN  |   Published on : 26th March 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகாலாந்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களின் சில பகுதிகளை இணைத்து "கிரேட்டர் நாகாலாந்து' மாநிலம் உருவாக்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர், சனிக்கிழமை கூறியதாவது:
    நாகாலாந்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களின் சில பகுதிகளை இணைத்து "கிரேட்டர் நாகாலாந்து' மாநிலத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அவ்வாறு வெளியான தகவல்கள் தவறானவை. அதுபோன்றவொரு முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை என்றார் அவர். நாகாலந்தில் அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களில் நாகர்கள் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்துடன் இணைத்து "கிரேட்டர் நாகாலாந்து' என்ற மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று நாகாலிம் தேசிய சோஷலிச கவுன்சில் (என்எஸ்சிஎன்-ஐஎம்) என்ற நாகா தீவிரவாத குழு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.
    அந்தக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, மத்திய அரசுக்கும், நாகா தீவிரவாத குழுவுக்கும் இடையே, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில், என்எஸ்சின்-ஐஎம் அமைப்பின் தலைவர் துய்ங்லாங் முய்வா, அரசு தரப்பு பிரதிநிதி ஆர்.என்.ரவி ஆகியோரிடையே கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    இரண்டு ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அங்கீகரித்துவிட்டது என்று துய்ங்லாங் கூறியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவல்களுக்கு மத்திய அரசு தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai