சுடச்சுட

    

    கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் விருந்து: உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 26th March 2017 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிப்பதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்குமாறு சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு
    அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    பாஜக தலைமையிலான மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் அங்கம் வகித்து வரும் சிவசேனை, சமீப காலமாக கூட்டணிக்குள் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் மீண்டும் கூட்டணிக்குள் சுமுக உறவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரில் எவரேனும் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக இம்முறை முன்னிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
    இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளுடன் இதுதொடர்பாக விவாதிக்க இம்மாத இறுதியில் விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்துக்கு உத்தவ் தாக்கரேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்று சிவசேனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பலம் மக்களவையிலும், மாநில சட்டப் பேரவை அளவிலும் பாஜவுக்கு இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாக வேண்டாமென நினைத்து இந்த விருந்துக்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார் என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai