சுடச்சுட

    

    கேரள கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு "அருளாளர்' பட்டம்

    By DIN  |   Published on : 26th March 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RaniMaria

    மத்தியப் பிரேதசத்தில் 22 ஆண்டுகளுக்கு முன் ஓடும் பேருந்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் "அருளாளர்' பட்டம் வழங்கவுள்ளார்.
    இதுதொடர்பாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் லியோ கார்னலியோ சனிக்கிழமை கூறியதாவது:
    கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு "அருளாளர்' பட்டம் வழங்குவதற்கு போப் பிரான்சிஸ் பரிந்துரை செய்து கையெழுத்திட்டிருக்கிறார். அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படும் தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. வரும் அக்டோபர் மாதம், அந்த நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்.
    "சகோதரி ராணி' என்று அழைக்கப்பட்ட ராணி மரியா, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 55 முறை கத்தியால் குத்தப்பட்டது.
    மத்தியப் பிரதேசத்தில் நிலமற்ற மக்களின் முன்னேற்றத்துக்காக சகோதரி ராணி பாடுபட்டு வந்ததால், அவர் மீது நிலச் சுவன்தார்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், கூலிப்படையைச் சேர்ந்த சமுந்தர் சிங் என்பவர், ஓடும் பேருந்தில் ராணியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில், சமுந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அவரது தண்டனை குறைக்கப்பட்டது.
    அதையடுத்து சகோதரி ராணியின் வாழ்க்கைப் பயணத்தை இறையியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஆய்வு செய்வதற்காக, அப்போதைய இந்தூர் பிஷப் ஜார்ஜ் அனாதில், கடந்த 2001-இல் இரண்டு குழுக்களை நியமித்திருந்தார்.
    அந்த இரு குழுக்களும் தங்களது ஆய்வறிக்கையை கடந்த 2005-ஆம் ஆண்டு சமர்ப்பித்தன. அதன்பிறகு, சகோதரி ராணியின் பெயர், வாடிகன் திருச்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
    சகோதரி ராணி தொடர்பான தகவல்களை ஆய்வுசெய்த வாடிகன் திருச்சபைக் குழு, அவருக்கு "அருளாளர்' என்ற பட்டம் வழங்குமாறு போப்புக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், சகோதரி ராணிக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படவுள்ளது என்று லியோ கார்னலியோ கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai