Enable Javscript for better performance
கோவா: உடற்பயிற்சியின்போது பிரிட்டன் பயணி திடீர் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    கோவா: உடற்பயிற்சியின்போது பிரிட்டன் பயணி திடீர் மரணம்

    By DIN  |   Published on : 26th March 2017 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவாவில் பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மாரடைப்பால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து அறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    பிரிட்டனைச் சேர்ந்தவர் பால் கெராட் அட்கின்சன் (58). இவர் கோவாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். மட்டோவாடோ பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், வெள்ளிக்கிழமை மாலை, அங்கிருந்த உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று தேகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
    அப்போது அட்கின்சன் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்து மூர்ச்சையானார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அட்கின்சன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
    அவரது திடீர் மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அட்கின்சனின் உடலைப் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் உத்தரவிட்டனர்.
    இதுதொடர்பாக தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அட்கின்சனின் உறவினர்களுக்கும் இந்தியத் தூதரகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai