சுடச்சுட

  

  சுற்றுச்சூழல் மாசடைந்ததற்கு வளர்ந்த நாடுகளே காரணம்: ஜே.எஸ். கேஹர்

  By DIN  |   Published on : 26th March 2017 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Khehar

  உலகில் சுற்றுச்சூழல் மாசடைந்ததற்கு வளர்ச்சியடைந்த நாடுகளே காரணம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் குற்றம்சாட்டினார்.
  இதுதொடர்பாக தில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் அவர் பேசியதாவது:
  வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் இடையே மின்சாரத்தை பயன்படுத்துவது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது ஆகியவற்றில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளைக் காட்டிலும், வளர்ந்த நாடுகளே சுற்றுச்சூழல் மாசடைந்ததற்கு அதிக காரணம்.
  வளர்ந்த நாடுகள்தான், கிரீன்ஹவுஸ் வாயுக்களை பல நூற்றாண்டுகளாக உருவாக்கி, உலகை வெப்பமடையச் செய்து தவறிழைத்துள்ளன. இந்த வாயுக்களை தொடர்ந்து வெளியேற்றுவதை தங்களது தார்மிக உரிமையாகக் கருதி அந்நாடுகள் செயல்பட்டு வருகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. உருவாக்கிய விதிகளை செயல்படுத்தவும் அந்த நாடுகள் மறுத்துவருகின்றன.
  பருவநிலை மாற்றம் தொடர்பான கியூட்டோ பிரகடனத்துக்கு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார். அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அரசின் பட்ஜெட்டில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை அவர் செயல்படுத்துவாரா? என்பதில் சந்தேகமே எழுகிறது.
  சுற்றுச்சூழல் விவகாரத்தில், வளர்ந்த நாடுகள் செய்த தவறுகள், மனித இனத்துக்கு அச்சுறுத்தலாகியுள்ளது. இருந்தபோதிலும், இந்த பிரச்னையை எதிர்கொள்வதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை அளிக்க வளர்ந்த நாடுகள் விரும்பவில்லை.
  சுற்றுச்சூழலை விஷமாக்கியதற்காக வளர்ந்த நாடுகள் இழப்பீடுகளை வழங்க மட்டும் மறக்கவில்லை. அத்துடன், காலனியாதிக்கத்தின்போது இருந்த இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தி அவை தங்களை வளப்படுத்திக் கொண்டதோடு, சமூக-பொருளாதார முறையில் வாய்ப்புக்கான ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்திவிட்டன. இது வளர்ச்சி தொடர்பான நமது இலக்குகளை எட்டுவதை மிகவும் கடினமாக்கி விட்டது என்று ஜே.எஸ். கேஹர் கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai