சுடச்சுட

  

  ஜம்மு: வைஷ்ணவி தேவி குகைக் கோயிலில் 6.8 லட்சம் பேர் தரிசனம்

  By DIN  |   Published on : 26th March 2017 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி ஆலயத்தின் குகைக் கோயிலுக்கு கடந்த மூன்று மாதங்களில் 6.83 லட்சம் பக்தர்கள் சென்று வழிபட்டுள்ளனர்.
  அவர்களில், புராதனக் குகைப் பாதை வழியாகச் சென்று 1.4 லட்சம் பேர் வைஷ்ணவி தேவியை வழிபட்டுள்ளதாக கோயில் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அக்கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் குமார் சாஹூ செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  உலக அளவில் புகழ்பெற்ற வைஷ்ண தேவி ஆலயத்துக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்குள்ள குகைக் கோயில் மிகவும் பிரசித்தமானது. மிகவும் குறுகலான மற்றும் கடினமான பாதைகளைக் கடந்துதான் அந்தக் குகைக் கோயிலுக்குச் சென்று வழிபட முடியும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஆண்டு முழுவதும் அங்கு தரிசனம் செய்ய இயலாது. ஜனவரி மாதத்தின் பிற்பாதி முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே அங்கு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
  அந்தக் காலகட்டத்தில் மட்டுமே குகைக் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதன்படி, நிகழாண்டைப் பொருத்தவரை 6.83 லட்சம் பேர் குகைக் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். அவர்களில், புராதன குகைப் பாதை வழியாக வந்து வழிபட்ட பக்தர்களின் எண்ணிக்கை 1.42 லட்சமாகும். தரிசனம் மேற்கொண்ட மொத்த பக்தர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டில் 1.5 லட்சம் பேர் கூடுதலாக வந்திருப்பது தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் பேர் குகைக் கோயிலுக்கு வந்து வழிபட்டனர் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai