சுடச்சுட

  

  பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் "நாப்கின்கள்' மீது வரி ஏதும் விதிக்கக் கூடாது என வலியுறுத்தி இணையதள (ஆன்லைன்) மனுவில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
  உலக அளவில் நீதி, மனித உரிமைகள், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்குகள் உரிமை, சுகாதாரம், நீடித்த உணவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்குடன் 'ஸ்ரீட்ஹய்ஞ்ங்.ர்ழ்ஞ்' என்ற அமெரிக்க இணையதள நிறுவனம் 2007-இல் தொடங்கப்பட்டது.
  ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், ஹியூமன் சொசைட்டி உள்ளிட்ட பல்வேறு உலக அளவிலான அரசு சாரா அமைப்புகள் இந்த இணையதளம் மூலம் தங்கள் விழிப்புணர்வு பிரசாரத்துக்கான மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றன. இந்த அமைப்பின் பல மனுக்கள் மத்திய அரசின் பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
  அந்த வகையில், சமூக விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளையும் அரசையும் வலியுறுத்த இந்த இணையதளத்தை சமூக ஆர்வலர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
  இவர்களின் வரிசையில், அஸ்ஸாம் மாநிலம், சில்சார் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் பெண் உறுப்பினர் சுஷ்மித் தேவ், இணையம் மூலம் "நாப்கின்களுக்கு வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்' என மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் ஆதரவை சேகரித்து வருகிறார். இதையொட்டி, 'ஸ்ரீட்ஹய்ஞ்ங்.ர்ழ்ஞ்' இணையதளத்தில் இவர் தொடங்கியுள்ள பக்கத்தில் இதுவரை இரண்டு லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
  இது குறித்து இணையதளத்தின் ஊடக அதிகாரி துர்கா நந்தினி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், "இந்தியாவில் உள்ள பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு மத்திய அரசு வரி விதிப்பதற்கு எதிராக சுஷ்மா தேவ் எங்கள் இணையதள பக்கத்தில் தொடங்கியுள்ள மனுவில் தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். அண்மையில் சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, தனது மனுவுக்கு ஆதரவு கோரும் பக்கத்தை சுஷ்மா தேவ் தொடங்கினார்.
  மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கும் சுஷ்மா தேவ் கடிதம் எழுதினார். மறுசுழற்சிக்குப் பயன்படத்தக்க நாப்கின்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை சுஷ்மா தேவ் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுக்களில் கையெழுத்திட்டுள்ளவர்களின் விவரங்களைத் தொகுத்து அது தொடர்பான மனுவை மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மேனகா காந்தி, ஜே.பி. நட்டா ஆகியோரிடம் விரைவில் அளிப்போம்' என்றார்.
  சுஷ்மா தேவ் தொடங்கியுள்ள மனுவில் கையெழுத்திடும் பக்கத்தில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் வெளியுறவுத் துறை இணையமைச்சரும் காங்கிரஸ் உறுப்பினருமான சசி தரூர், பாஜக உறுப்பினர் வருண் காந்தி, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே, தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் கவிதா கல்வகுண்டலா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, எம்.பி.க்கள் நினோங் எரிங்,ராஜீவ் சத்தவ் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai