சுடச்சுட

    

    நேஷனல் ஹெரால்டு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைக்கு சோனியா, ராகுல் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 26th March 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் கூடுதல் சாட்சிகள், ஆவணங்களைக் கோரி தில்லி பெருநகர நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தெளிவற்றதாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்னர்.
    இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமியின் மனு தொடர்பாக, அவர்களது சார்பில் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சமர்பிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
    சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு கூடுதல் சாட்சிகளையும், புதிய ஆவணங்களையும் கோரியுள்ளார்.
    எனினும், அந்த சாட்சிகளை விசாரிப்பதற்கான காரணங்கள் குறித்தோ, ஆவணங்களுக்கான தேவை குறித்தோ அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
    எனவே, சட்டத்துக்குப் புறம்பாக வழக்கைத் திசைதிருப்பும் நோக்கிலேயே அவர் அந்த விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுல்ளது.
    அதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ஆம் தேதிக்கு பெருநகர நீதிபதி லவ்லீன் ஒத்திவைத்தார்.
    பின்னணி: சுதந்திரத்துக்கு முன்னர் ஜவாஹர்லால் நேரு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களால் கடந்த 1938-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "அசோசியேடட் ஜர்னல்ஸ்' நிறுவனம், "நேஷனல் ஹெரால்டு', "குவாமி ஆவாஸ்' ஆகிய நாளிதழ்களை நடத்தி வந்தது.
    அந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி வட்டியில்லா கடன் அளித்திருந்ததாகவும், அந்தத் தொகையை அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
    இந்தச் சூழலில், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்ட "யங் இந்தியன்' என்ற தனியார் நிறுவனம், அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான (76%) பங்குகளை கடந்த 2010-ஆம் ஆண்டு கைப்பற்றி, அதன் மூலம் அந்தப் பொது நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.
    இதன்மூலம், பொதுத் துறை நிறுவனச் சொத்துகளை சோனியா மற்றும் ராகுல் காந்தி அபகரித்ததாக சுப்பிரமணியன் சுவாமி தில்லி பெருநகர நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai