சுடச்சுட

    

    பல்கலைக்கழகங்களை சுதந்திரமான மையங்களாகப் பாதுகாக்க வேண்டும்: ஹமீது அன்சாரி

    By DIN  |   Published on : 26th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ans

    சண்டீகருக்கு சனிக்கிழமை வருகை புரிந்த குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, அவரது மனைவி சல்மா அன்சாரிக்கு பூங்கொத்து அளித்து வரவேற்கும் பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல்.

    "நமது பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்துக்கு குறுகிய மனப் போக்குகளால் சவால் விடுக்கப்படுகிறது. சுதந்திரமான மையங்களாக அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்' என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
    இது தொடர்பாக சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 66-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
    நம் நாட்டில் அண்மையில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் "ஒரு பல்கலைக்கழகம் என்ன செய்யலாம்? அல்லது என்ன செய்யக் கூடாது?' என்ற குழப்பம் பெரிய அளவில் நிலவுவதைக் காட்டுகின்றன.
    பொது நன்மை என்ற பெயரில் குறுகிய மனப்போக்குகளால் நமது பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்துக்கு சவால் விடப்படுகிறது. மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பது, எதிர்த்துப் போராடுவது ஆகியவை அரசியல்சாசனத்தின் மூலம் அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பன்முகத்தன்மையை நிலைநாட்டுவதோடு, இந்த நாட்டை எந்தவொரு குறுகிய இனப்பிரிவு, சித்தாந்தம் அல்லது மத அடிப்படையில் வரையறுப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கின்றன.
    சட்டவிரோத நடத்தை அல்லது வன்முறையைக் கையாளுதல் ஆகிய விவகாரங்களைத் தவிர, பேராசிரியர்களையோ மாணவர்களையோ ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்குமாறோ அல்லது எடுக்காமல் இருக்குமாறோ ஒரு பல்கலைக்கழகம் கோரக் கூடாது.
    மாறாக, பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்விச்சூழலையும் சுதந்திரத்தையும் கட்டிக் காக்க அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
    அவநம்பிக்கை நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில், பல்கலைக்கழகங்களை சுதந்திரமான மையங்களாகவும், சுதந்திர மதிப்பீடுகளைப் புதுப்பிக்கக்கூடிய ஆதாரங்களாகவும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு பல்கலைக்கழகமானது அறிவுசார் சுதந்திரத்தைப் போற்றக்கூடிய சூழலைப் பேணிக் காக்க வேண்டும்.
    அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் பேசுவதற்கான மற்றும் எதிர்த்து கருத்து கூறக்கூடிய பொறுப்பு ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் உள்ளது. அவ்வாறு செய்ய அவை தவறுவது என்பது, விவேகமான ஆய்வுப் பாதையில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்து விடும் என்றார் ஹமீது அன்சாரி.
    தில்லி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பிலான ஏபிவிபி மாணவர் அமைப்புக்கும், இடதுசாரிகள் சார்பிலான ஏஐஎஸ்ஏ மாணவர் அமைப்புக்கும் அண்மையில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்களின் பின்னணியில் குடியரசு துணைத் தலைவர் மேற்கண்ட கருத்தை சற்று வலுவான முறையில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai