சுடச்சுட

    

    பிஎஸ்எஃப் தாக்குதல் பிரிவின் முதல் பெண் அதிகாரியாக தனுஸ்ரீ தேர்வு

    By DIN  |   Published on : 26th March 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tanushreepareek

    எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 51-ஆண்டு கால வரலாற்றில் அதன் தாக்குதல் பிரிவின் முதல் பெண் அதிகாரியாக தனுஸ்ரீ பாரீக் (25) சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
    ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரைச் சேர்ந்த தனுஸ்ரீ பாரீக், கடந்த 2014-ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அதற்கு முந்தைய ஆண்டில் தான் (2013) பெண்களை அதிகாரிகளாக நியமிப்பதற்கு எல்லைப் பாதுகாப்புப் படை முடிவு செய்தது.
    எல்லைப் பாதுகாப்புப் படை, கடந்த 1965-இல் உருவாக்கப்பட்டது. அதுமுதல் கடந்த 51 ஆண்டுகளாக அந்தப் படையின் தாக்குதல் பிரிவில் பெண்கள் யாரும் அதிகாரியாகத் தேர்வு செய்யப்படவில்லை.
    இந்நிலையில், அந்தப் பிரிவின் முதல் பெண் அதிகாரியாக தனுஸ்ரீ பாரீக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    இதனிடையே, எல்லைப் பாதுகாப்புப் படையின் தாக்குதல் பிரிவில் ஓராண்டு கால பயிற்சியை முடித்த 67 அதிகாரிகளுக்கு பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்ச்சி மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரை அடுத்த தேக்கன்பூர் முகாமில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தனுஸ்ரீ பாரீக்குக்கு பதக்கத்தை அணிவித்தார்.
    தொடர்ந்து, பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு தனுஸ்ரீ பாரீக் தலைமையில் நடைபெற்றது. அவர் பஞ்சாப் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணியில் அமர்த்தப்பட உள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai