சுடச்சுட

    

    பிகார்: மின் கட்டண உயர்வை நிதீஷ் அரசு திரும்பப் பெற வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 26th March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nmin

    பிகாரில் வரும் ஏப்ரல் 1 முதல் மின் கட்டணம் 55 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படவுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லோக் ஜன சக்தி கட்சித் தொண்டர்கள்.

    பிகாரில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
    பிகாரில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் 55 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படும் என அந்த மாநில மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதற்கு, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
    இதுதொடர்பாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், இப்பிரச்னை மாநில சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. பேரவை சனிக்கிழமை கூடியபோது, பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரேம் குமார் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசியதாவது:
    பிகாரில் மின் கட்டணம் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை நிதீஷ் குமார் அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.
    இதேபோல், மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சியும் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
    இவர்களுக்கு பதிலளித்து மாநில மின்துறை அமைச்சர் விஜேந்திர பிரசாத் யாதவ் பேசியதாவது:
    பிகார் மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. எனினும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆணையம் அறிவித்துள்ள கட்டண உயர்வு பட்டியலை ஆராய்ந்து அடுத்த 2 அல்லது 3 நாள்களில் இறுதி முடிவு எடுப்போம்.
    மேலும், வரும் நிதியாண்டு முதல் மின் பயனீட்டாளர்களுக்கு நேரடியாக மானியத்தை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
    முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கான நோட்டீûஸ அளித்திருந்தனர். எனினும், அவற்றை பேரவைத் தலைவர் விஜய் குமார் சௌத்ரி ஏற்க மறுத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai