சுடச்சுட

    

    மின்சார செலவில் ரூ.41,000 கோடி மிச்சப்படுத்த ரயில்வே துறை திட்டம்

    By DIN  |   Published on : 26th March 2017 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளுக்கான எரிபொருள் செலவில் ரூ.41,000 கோடி மிச்சப்படுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
    இதுகுறித்து ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:
    மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.41,000 கோடியை மிச்சப்படுத்தும் திட்டத்தை ரயில்வேத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
    அந்தத் திட்டத்தின்கிழ், இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,000 மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
    ரயில்வே நிலையங்கள், மற்றும் ரயில்வே துறைக்குச் சொந்தமான கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் அமைப்பதன் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும், நிலப் பகுதிகளில் சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.
    இவை தவிர, காற்றாலைகள் மூலம் 26 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
    நிலத்தடி நீர்: நாளுக்கு நாள் நிலத்தடி நீரின் இருப்பு வெகுவாக வற்றி வருகிறது. இந்தச் சூழலில், ரயில்வே நிலங்களில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் ரயில்வே துறை மட்டுமன்றி, பொதுமக்களும் பலன் பெறுவர்.
    கட்டணமில்லா வருவாய்: பயணக் கட்டணங்கள் அல்லாத, பிற வகை வருவாயை, ரூ.17,000 கோடி வரை கூடுதலாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    ரயில்வே துறை ரூ.8.5 லட்சம் கோடியை முதலீடாக திரட்டி வருகிறது. எனவே, ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற போதிய நிதியில்லை என்ற பிரச்னை இனி இருக்காது என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai