சுடச்சுட

  
  Lalu32

  பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வில் பங்கேற்ற ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மேடை சரிந்து விழுந்ததில் காயமடைந்தார்.
  பாட்னாவில் வெள்ளிக்கிழமை யாகம் வளர்க்கப்பட்டது. இதில், லாலு பிரசாத் பங்கேற்றார். மேலும் அவரது மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மற்றொரு மகனும், மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான தேஜ் பிரதாப், லாலுவின் மகள் மிஸா பாரதி ஆகியோரும் உடன் வந்தனர். அவர்கள் அனைவரும் யாக குண்டத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்தனர். அப்போது, அவர்களது ஆதரவாளர்கள் பலரும் மேடை மீது ஏறினர். இதனால், பாரம் தாங்காது மேடை சரிந்து விழுந்தது.
  இதில், லாலு பிரசாத் யாதவ் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் "தமது முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai