சுடச்சுட

    

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

    பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ரஞ்சன் சோலங்கி (35), எம்.எஸ்.கோர்படே (49), கௌசிக் சவாண் (32), கிஷோர்யாதவ் (25). தனது திருமணத்தையொட்டி உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க மைசூரு மாவட்டம் ஹுன்சூர் வட்டம் ரத்னபுரிக்கு நண்பர்களுடன் வந்த ரஞ்சன்சோலங்கி, பின்னர் அங்கிருந்து நாகரஹொலேவுக்கு சென்றுள்ளார்.

    நாகர்ஹொலே அருகே நெல்லூர் மேம்பாத்தின் திருப்பத்தில் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயன்றப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ரஞ்சன்சோலங்கி, கோர்படே, கௌசிக்சவாண், கிஷோர் யாதவ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஹுனுசூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai