சுடச்சுட

  

  வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய நோட்டுகள்: மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

  By DIN  |   Published on : 26th March 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிடாதது ஏன்?' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
  இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
  செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.
  இப்போதும், வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட ஏன் மத்திய அரசால் முடியவில்லை?
  இது மோடி தலைமையிலான அரசின் கையாலாகாத்தனமா? அல்லது கயமைத்தனமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
  புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதவை என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai