சுடச்சுட

  

  விமானத்தில் இடம் கிடையாது; ரெயிலிலும் மக்களுக்கு பயந்து பாதியில் 'எஸ்கேப் ' ஆன சிவசேனா எம்.பி!

  By DIN  |   Published on : 26th March 2017 01:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  geikwad

   

  மும்பை: ஏர்இந்தியா மேலாளரை காலனியால் தாக்கியதால் விமான நிறுவனங்களால் இடம் மறுக்கப்பட்ட சிவசேனா எம்.பி., ரயிலில் மும்பை செல்லும் வழியில் பொது மக்களை எதிர்கொள்ள பயந்து, இடையிலேயே இறங்கி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

  மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் கடந்த 23-ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல புனே விமான நிலையத்துக்கு வந்தார். அவர் கையில் ‘பிசினஸ்’ வகுப்பு டிக்கெட்   வைத்திருந்தார். ஆனால் அவர் பயணம் செய்த விமானத்தில் ‘எகனாமி’ வகுப்பு கொண்ட விமானம் மட்டுமே இருந்தது. இதனால் அவர் எரிச்சலாகி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கும் பொழுது  விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். சமாதானம் செய்ய முயன்ற ஏர் இந்தியா மேலாளர் சுகுமார் (வயது 60) என்பவரை கெய்க்வாட் கடுமையாக தாக்கி தனது காலணியால் அடித்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சிவசேனா கட்சித்தலைமையும் அவருக்கு உத்தரவிட்டு உள்ளது. அவரது செயலின் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் கெய்க்வாட் எம்.பி.யை தனது விமானத்தில் அனுமதிக்க தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

  அதை பின்பற்றி ‘இண்டிகோ’, ‘ஸ்பைஸ்ஜெட்’, ‘கோ ஏர்’, ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆகிய தனியார் விமான நிறுவனங்களும் அவருக்கு தடை விதித்து உள்ளன. ஆனால் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என கெய்க்வாட் எம்.பி. கூறினார். 

  விமான நிறுவனங்களின் தடை காரணமாக அவர் தில்லியில் இருந்து புனேக்கு விமானத்தில் திரும்ப முடியாமல் தவித்தார். எனவே கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தில்லியில் இருந்து மும்பை புறப்பட்டார். பயணத்தின் பொழுது அவர் ரெயிலில் அமைதியாக பயணம் செய்தார். யாருடனும் பேசாமல் இருந்தார். எதுவும் சாப்பிடவில்லை. டீ மட்டுமே வாங்கி குடித்தார்.

  மும்பை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மீடியாவினால் ஏதேனும் தர்ம சங்கடங்கள் நேரலாம் என்று பயந்து அவர் மும்பைக்கு முன்பே குஜராத் மாநிலம் வாபி ரெயில் நிலையத்தில் அவர் இறங்கினார். இந்த நிலையமானது மும்பையில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து அவர் கார் மூலம் சென்றதாக கூறப்படுகிறது. ரெயிலில் கெய்க்வாட் மும்பை வரை டிக்கெட் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai