சுடச்சுட

  
  naralok

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நார லோகேஷ் (34) விரைவில் அமைச்சராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  ஆந்திர அமைச்சரவை, ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நார லோகேஷுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
  இதுதொடர்பாக, தெலுங்கு தேச கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
  சிலருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்படலாம். சில அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடும்.
  வரும் 2019-இல் ஆந்திர சட்டப் பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலைக் கருத்தில்கொண்டும், கட்சியை வலுப்படுத்தவும் வேண்டி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்றார் அவர்.
  ஆந்திர சட்ட மேலவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் லோகேஷ் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai