Enable Javscript for better performance
காஷ்மீர்: காவல்துறை அதிகாரியின் வீடு பயங்கரவாதிகளால் சூறையாடல்- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர்: காவல்துறை அதிகாரியின் வீடு பயங்கரவாதிகளால் சூறையாடல்

    By DIN  |   Published on : 27th March 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியின் வீடு பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்டது. மேலும் அந்த அதிகாரியின் மகன் உள்ளிட்ட இருவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று, பின்னர் விடுவித்தனர்.

    பட்காம் மாவட்டத்திலுள்ள சதூரா நகரில் காவல்துறை துணை ஆய்வாளர் எம்.சுபான் பட், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு, அவருடைய வீட்டுக்குள் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர். தொடர்ந்து, அவர்கள் அந்த வீட்டை சூறையாடினர். பின்னர், அவர்கள் சுபான் பட்டின் மகனையும், மருமகனையும் சிறைபிடித்தனர்.
    தொடர்ந்து அங்கிருந்த காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினர். சிறிது தொலைவு சென்ற பின், இருவரையும் இறக்கிவிட்டனர். பின்னர், அந்த காரை தீ வைத்து எரித்தனர்.
    இதுதொடர்பாக, போலீஸார் கூறியதாவது: பயங்கரவாதியாக மாறியுள்ள பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் தற்போது பாராமுல்லா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறையில் தான், துணை ஆய்வாளர் சுபான் பட் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
    இந்நிலையில், சுபான் பட்டை கொல்லும் நோக்கத்தில் பயங்கரவாதிகள் அவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளனர். எனினும், அவர் இல்லாததால் அவருடைய மகன் உள்ளிட்ட இருவரை கடத்திச் சென்று பின்னர் விடுவித்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து, காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறாவண்ணம் கடும் நடவ
    டிக்கை எடுக்கப்படும்' என்றார்.
    இதனிடையே, சிறைகளில் பணிபுரியும் காவல்துறையினருக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்நோக்கில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாநில சிறைத் துறை தலைவர் எஸ்.கே.மிஸ்ரா அறிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai