சுடச்சுட

    

    சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து! 

    Published on : 27th March 2017 02:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    adhar

     

    புதுதில்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

    சமீபத்தில் மத்திய அரசு தான் வழங்கும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வருகிறது. தற்போது அலைபேசி சிம் கார்டு வாங்குவதற்கு, ஓட்டுநர் உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆதார் எண் அவசியமாகிவருகிறது.

    இவ்வாறு மத்திய அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞரான ஷ்யாம் திவான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கானது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.எஸ்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிபதிகள், 'மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நல திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை' என்று கருத்து தெரிவித்தனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai