சுடச்சுட

  
  parliment

  சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை அமல்படுத்துவதற்குத் தேவையான நான்கு துணை மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (மார்ச் 27) தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
  இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
  ஜிஎஸ்டி வரி முறையை வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  அதற்காக, ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஈட்டுறுதிச் சட்டம், மத்திய ஜிஎஸ்டி (சி-ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ-ஜிஎஸ்டி), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யு-ஜிஎஸ்டி) ஆகிய நான்கு முக்கிய துணை மசோதாக்களை மத்திய அரசு திங்கள்கிழமை (மார்ச் 27) தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  இந்த மசோதாக்கள் மீது எவ்வளவு நேரம் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்ய, நாடாளுமன்ற நடவடிக்கை ஆலோசனைக் குழுவும் அதே நாளில் கூடும் என்று கூறப்படுகிறது. வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் அந்த மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அங்கு அந்த மசோதாவில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால், மீண்டும் மக்களவையில் அதுகுறித்து விவாதிக்கப்படும்.
  ஏற்கெனவே, இந்த நான்கு துணை மசோதாக்களுக்கும், மாநில ஜிஎஸ்டி (எஸ்-ஜிஎஸ்டி) துணை மசோதாவுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  எஸ்-ஜிஎஸ்டி துணை மசோதாவைப் பொருத்தவரை, அது அந்தந்த மாநிலங்களின் பேரவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் ஈட்டுறுதிச் சட்டம், சி-ஜிஎஸ்டி, ஐ-ஜிஎஸ்டி, யு-ஜிஎஸ்டி ஆகிய நான்கு துணை மசோதாக்களும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால்தான், ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகப்படுத்த முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர், அடுத்த மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai