தேவஸ்தான புடவைகள் ஏப். 3-இல் ஏலம்
By DIN | Published on : 27th March 2017 12:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருமலை தேவஸ்தானம் தன்னிடம் நிலுவையில் உள்ள பழைய புடவைகளை ஏப்ரல் 3-இல் ஏலம் விட உள்ளதாக தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் மற்றும் தேவஸ்தானத்துக்கு தொடர்புடைய கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட புடவைகளை தேவஸ்தானம் ஏப்ரல் 3-ஆம் தேதி ஏலம் விட உள்ளது. இதில் நிலுவையில் உள்ள 3,262 புடவைகளை 11 லாட்டுகளாகப் பிரித்து ஏலம் விட உள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ஆம் தேதி மதியத்துக்குள் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயருக்கு ஆயிரம் ரூபாய்க்கு வரைவோலை எடுத்து திருப்பதியில் உள்ள மார்க்கெட்டிங் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 3-ஆம் தேதி கிடைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 0877-2264429, 0877-2264221 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் www.tirumala.org என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.