சுடச்சுட

    

    நீதிபதிகளின் பெயர்களை நிராகரித்தது ஏன்?: எழுத்துப்பூர்வமாக  விளக்கம் தர அரசு மறுப்பு

    By DIN  |   Published on : 27th March 2017 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sc

    நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நிராகரித்ததற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தர முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அரசின் இந்த பதிலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) ஏற்க மறுத்துவிட்டது.
    உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட தேர்வுக் குழு (கொலீஜியம்), மத்திய அரசுக்கு நீதிபதிகள் பெயர்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை அளித்து வருகிறது.
    இதுபோன்று அளிக்கப்பட்ட பரிந்துரைப் பட்டியலை இறுதிசெய்வதற்கு கொலீஜியம் குழுவும், மத்திய அரசும் கடந்த ஜனவரி மாதம் முதல் முயன்று வருகின்றன.
    இந்நிலையில் கொலீஜியம் குழு அளித்த பரிந்துரைகளில் சில நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. தேசப் பாதுகாப்பு கருதியும், பொது மக்கள் நலன் கருதியும் உளவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் அந்த நீதிபதிகளின் பெயர்களை நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு கூறியிருந்தது.
    அதையடுத்து, சில நீதிபதிகளின் பெயர்களை நிராகரித்ததற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு மத்திய அரசை கொலீஜியம் குழு கேட்டுக் கொண்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும் என்று கூறிவிட்டது. இதை ஏற்க மறுத்துள்ள கொலீஜியம் குழு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக நீதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai