சுடச்சுட

  

  நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுப்பிரமணியன் சுவாமி

  By DIN  |   Published on : 27th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  swamy

  நேரு குடும்பத்தில் ராஜீவ் காந்தி மட்டுமே நல்ல மனிதப் பண்புகள் நிறைந்தவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
  பிகார் தலைநகர் பாட்னாவில், அயோத்தி பிரச்னை குறித்து ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:
  நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலேயே, ராஜீவ் காந்தி மட்டுமே நல்ல மனிதப் பண்புகளைக் கொண்டவராக இருந்தார்.
  ஹிந்துக்களின் எழுச்சியில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
  தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணத் தொடரை ஒளிபரப்ப காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், அந்த எதிர்ப்பைப் பொருள்படுத்தாமல் ராமாயணம் தொடரை ஒளிபரப்ப ராஜீவ் காந்தி அனுமதித்தார் என்றார் சுவாமி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai