சுடச்சுட

    

    பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

    By அமிர்தசரஸ்  |   Published on : 27th March 2017 05:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள குர்ட்சாபூர் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கான சர்வதேச எல்லைப் பகுதி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் இன்று எல்லைப் பாதுகாப்பு வேலி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அவரை எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai