சுடச்சுட

    

    பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக புதிய ஆணையம்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 27th March 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிற்படுத்தப்பட்டோருக்காக சிவில் நீதிமன்ற அந்தஸ்து கொண்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இதுகுறித்து அவை கூறுவதாவது:
    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினரின் குறைகளை விசாரித்து, தீர்ப்புகள் வழங்கும் அதிகாரம் அந்தந்த பிரிவினருக்கான ஆணையங்களுக்கு உள்ளது.
    ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு அத்தகைய அதிகாரம் கொண்ட ஆணையம் இல்லாத நிலை இருந்து வந்தது. எனவே, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் அத்தகைய அரசமைப்பு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
    இந்தச் சூழலில், தற்போது செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் தேசிய நல ஆணையத்தைக் கலைத்துவிட்டு, அரசியல் சாசன அந்தஸ்து கொண்ட புதிய ஆணையத்தை சமூகம் மற்றும் கல்விரீதியில் பின்தங்கியோருக்கான தேசிய ஆணையம் (என்சிஎஸ்இபிசி) என்ற பெயரில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    சிவில் நீதிமன்ற அந்தஸ்து கொண்ட இந்த அமைப்பு, சமூக நீதித் துறையின் கீழ் செயல்படும். இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.
    பிற்படுத்தப்பட்டோரின் கணிசமான வாக்குகளைப் பெற்று உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைத்துள்ள பாஜக, அந்த பிரிவினரிடையே தங்களது செல்வாக்கை மேலும் அதிகரித்துக் கொள்ளும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai