மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் வைகோ சந்திப்பு: தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்தார்
By புதுதில்லி, | Published on : 27th March 2017 05:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்தார்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார். அப்போது தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 13 நாட்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் அறப்போராட்டத்தை மத்திய அமைச்சர் கவனத்திற்கு கொண்டுச் சென்றார்.
மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.