சுடச்சுட

    

    மத்திய பிரதேசத்தில் மினிலாரி கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

    By ஜபல்பூர்  |   Published on : 27th March 2017 02:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பிரதேசத்தில் மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானார்கள்.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் இன்று தொழிலாளர்கள் சென்ற மினிலாரி நீச்சி கிராமத்தின் அருகே ஜபல்பூர் - சார்கவான் சாலையில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினிலாரி கவிழ்ந்ததில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மினிலாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai