சுடச்சுட

  

  மின்சாரம், குடிநீர் கட்டணங்களை செலுத்தாத கட்சிகளுக்கு தேர்தலில் தடை

  Published on : 27th March 2017 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Electioncom

  மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தாத கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தத் தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
  ஏற்கெனவே, மின்சாரம், குடிநீர் போன்ற அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முழுமையாகச் செலுத்தியதற்கான ஆவணங்களை மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனுவின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கும் இதேபோன்ற விதிமுறையைக் கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
  இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக தில்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது.
  அதில், வேட்பாளர்கள் மட்டுமின்றி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைப் பாக்கி வைக்கவில்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
  இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:
  உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பரிசீலித்து அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, எவ்வித கட்டண பாக்கியும் இல்லை என்ற சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டுள்ளோம் என்றார் அவர்.
  சமீபத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சில வேட்பாளர்கள், தாங்கள் எவ்வித கட்டண பாக்கியும் வைக்கவில்லை என்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனினும், இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி, அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இப்போதைய விதிமுறைகளில் இடமில்லை. எனினும், இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai