Enable Javscript for better performance
வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைதான மங்களூர் காவலர் நீதிமன்ற கட்டடத்தில் இருந்து குதித்து பலி: வைரலாகும- Dinamani

சுடச்சுட

    

    வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைதான மங்களூர் காவலர் நீதிமன்ற கட்டடத்தில் இருந்து குதித்து பலி: வைரலாகும் விடியோ

    By DIN  |   Published on : 27th March 2017 12:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jump


    மங்களூர்: குழந்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான மங்களூர் நகர காவலர், நீதிமன்றத்தில் இருந்து தப்ப முயன்ற போது, 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானார்.

    மங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட தலைமைக் காவலர் பிரவீன் (35), அங்கிருந்து தப்ப முயன்றபோது, நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன், சிகிச்சை பலனின்றி பலியானதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் கிடைத்தால்தான், அவர் பலியானதற்கான காரணம் தெரிய வரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பாஜ்பி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பிரவீன், 11 வயது சிறுமியும் அவரது தாயும் குளிக்கும் போது தனது செல்போனில் படம் எடுத்து அவர்களை மிரட்டியுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பிரவீன் கைது செய்யப்பட்டார்.

    இவர் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்து குதித்த காட்சி, நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது செய்தி ஊடங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai