சுடச்சுட

  
  train

  நாட்டில் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இணையதளம் வாயிலாக அரசின் சேவைகள் உள்பட பல்வேறு சேவைககளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக, 500 ரயில் நிலையங்களில் வை-ஃபை இணைய வசதி மையங்களை ரயில்வே துறை அமைக்கவுள்ளது.
  தொலை தூரப் பகுதிகளுக்கு தொடர்பை உருவாக்க வேண்டும், அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
  இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: "ரயில்வயர் ஸாத்தி' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மையங்கள், அரசின் மின்னணு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள் அழைப்பு மையங்களைப் போன்று செயல்படும்.
  இந்த மையங்களை மின்னணு வர்த்தகம், இணைய வழி வங்கிச் சேவைகள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல், ஆயுள் காப்பீடு செலுத்துதல், ரயில், பேருந்து டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்தல் போன்ற சேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர, செல்லிடப்பேசி கட்டணம், தொலைக்காட்சி டிடிஎச் சேவை கட்டணம் ஆகியவற்றையும் இந்த மையங்களில் இருந்து செலுத்தலாம்.
  ஏற்கெனவே, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 400 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை இணைய வசதியை ரயில்வே துறை அளித்து வருகிறது. இந்த நிலையில, தொலை தூரப் பகுதிகளுக்கு தொடர்பை உருவாக்கவும், அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், 500 "ரயில்வயர் ஸாத்தி' வை-ஃபை இணையச் சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
  இந்தத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புப் பெற விரும்பும் இளைஞர்கள், ரயில்வே அமைச்சகத்தின் தொலைத் தொடர்பு பிரிவான "ரயில் டெல்' அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பயிற்சி பெற்று தொழில்முனைவோராக உருவாகலாம். அவர்களுக்கு மத்திய அரசின் "முத்ரா' திட்டத்தின் மூலமாக கடனுதவி அளிக்கப்படும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai