சுடச்சுட

    
    aad

    அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவது குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை (மார்ச் 29) விவாதம் நடைபெறவுள்ளது.
    மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியபோது, காங்கிரஸைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் எழுந்து அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியனிடம், 'ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக குறுகிய கால விவாதம் நடத்துவது தொடர்பாக நான் கொடுத்த நோட்டீஸின் நிலை என்ன?' என்று கேட்டார்.
    அதற்குப் பதிலளித்து குரியன் கூறியதாவது: ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பான விவாதம், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும், அன்றைய தினம் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு வேறு அலுவல்கள் இருந்தன. இதையடுத்து, அந்த விவாதம் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    இதன்படி, அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவது குறித்த குறுகிய கால விவாதம் புதன்கிழமை நடைபெறவுள்ளது என்றார் குரியன். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான திக்விஜய் சிங் எழுந்து பிரச்னையொன்றை எழுப்பினார். அப்போது, அவர் பேசியதாவது:
    கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும் பாஜகவை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைப்பு விடுத்தது குறித்து விதி எண் 168-இன் கீழ் விவாதம் நடத்த நோட்டீஸ் அளித்திருந்தேன்.
    தற்போது, அதை குறுகிய கால விவாதத்துக்கான நோட்டீஸாக மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் திக்விஜய் சிங்.
    அப்போது, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குறுக்கிட்டு, 'இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தகுந்த தீர்மானம் கொண்டு வரப்படுவதில் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai