சுடச்சுட

  

  உண்மையில் நடந்தது இதுதான்: சிவசேனை எம்.பி. ரவீந்திர கெயிக்வாட்  பரபரப்பு தகவல்

  By DIN  |   Published on : 28th March 2017 12:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ravindra_Gaikwad

  மும்பை: ஏர் இந்தியா ஊழியரை தாக்கியதாக வெளியாகும் தகவல்களில் உண்மை மறைக்கப்பட்டிருப்பதாகவும், விமான நிறுவன ஊழியர்கள் பொய்யா தகவலை பரப்புவதாகவும் சிவசேனை எம்.பி. ரவீந்திர கெயிக்வாட் கூறியுள்ளார்.

  உண்மையிலேயே, நான் பிசினஸ் கிளாஸ் இருக்கை கேட்கவேயில்லை, எகனாமிக் இருக்கையிலேயே அமர்ந்தேன். ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களிடம், புகாரைப் பதிவு செய்யும் புத்தகத்தைக் கேட்டேன்.

  விமானத்தில் பயணம் செய்யும் போது, ஊழியர்களின் பொறுப்பற்ற செயலை கவனித்து, அது குறித்து புகார் புத்தகத்தில் பதிவு செய்ய விரும்பினேன். அதற்காக புகார் புத்தகத்தைக் கேட்டதற்கு, ஊழியர்கள் தர மறுத்து என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இறுதியில், நான் பிசினஸ் கிளாஸ் இருக்கை கேட்டு பிரச்னை செய்ததாக ஒரு அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டை என் மீது சுமத்தினார்கள் என்று கெயிக்வாட் கூறியுள்ளார்.

  ஏர் இந்தியா நிர்வாகம் மீது தில்லி காவல் நிலையத்தில் இது குறித்து கெயிக்வாட் புகார் பதிவு செய்துள்ளார்.

  சம்பவத்தின் பின்னணி: சிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெயிக்வாட், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆவார்.
  இவர் புணேவிலிருந்து தில்லிக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்தார்.

  இந்நிலையில், புணே விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது எக்கானமி வகுப்பு இருக்கைகள் மட்டுமே உள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எனினும், அவர் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தில்லியை அடைந்தபோது, அவர் விமானத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார்.

  இதனால், விமான மேலாளர் சுகுமாருக்கும், ரவீந்திர கெய்க்வாடுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சுகுமாரை ரவீந்திர கெய்க்வாட் தனது காலணியால் தாக்கினார். மேலும், இதற்காகத் தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் ரவீந்திர கெய்க்வாட் மீது தில்லி காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அவருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில் பயணம் செய்வதற்கு ஏர் இந்தியா தடை விதித்தது. தொடர்ந்து, பிற தனியார் விமான நிறுவனங்களும் ரவீந்திர கெய்க்வாடுக்கு இதேபோன்ற தடையை விதித்தன.

  இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரவீந்திர கெய்க்வாட் புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai