Enable Javscript for better performance
உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே குண்டு வெடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே குண்டு வெடிப்பு

    By லக்னௌ  |   Published on : 28th March 2017 04:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    up_blast

    உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம்,  சண்ட் கபீர் நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இன்று காலை சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில் ராஜீ தபா என்பவர் காயமடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற போலீசார் அப்பகுதியில் மேலும் 3 குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே தண்டவாளம் அருகே குண்டுவெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai