சுடச்சுட

    

    உள்கட்சித் தேர்தலை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.
    முன்னதாக, ஜூன் 30-ஆம் தேதிக்குள் காங்கிரஸ் உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. எனினும், உள்கட்சித் தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் வேண்டுமென்று காங்கிரஸ் சார்பில் கோரப்பட்டது.
    இதையடுத்து, மேலும் 6 மாதங்கள் கூடுதல் அவகாசம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், இதற்கு மேலும் கால நீட்டிப்பு கேட்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
    அண்மையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு, காங்கிரஸ் கட்சியை அமைப்புரீதியாக மாற்றியமைக்க வேண்டுமென்று மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
    இந்நிலையில், உள்கட்சித் தேர்தலை நடத்த இந்த ஆண்டு இறுதி வரைக்குமான கால அவகாசத்தை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதியில் அக்கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai