Enable Javscript for better performance
காஷ்மீர் இடைத்தேர்தலை சீர்குலைக்க சதி: 7 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் இடைத்தேர்தலை சீர்குலைக்க சதி: 7 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் கைது

    By DIN  |   Published on : 28th March 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடைத்தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    இதுதொடர்பாக, குல்காம் மாவட்ட காவல் துறை எஸ்.பி. ஸ்ரீதர் பாட்டீல் திங்கள்கிழமை கூறியதாவது:
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், அனந்த்நாக் மக்களவைத் தொகுதிகளுக்கு முறையே அடுத்த மாதம் 9, 12-ஆம் தேதிகளில் இடைத்தேர்ல் நடைபெறவுள்ளது.
    இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி, இடைத்தேர்தலை சீர்குலைப்பதற்காக, குழு ஒன்றை பயங்கரவாதிகள் அமைத்திருப்பதாக கடந்த 21-ஆம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது.
    அதனடிப்படையில் விசாரணை நடத்தியதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் மாவட்டத் தலைவரான அல்தாஃப் தார் என்கிற அல்-கச்ரூவும், டெளசீஃப் ஷேக் என்கிற மொசாதும் அந்தக் குழு அமைத்தது தெரியவந்தது.
    அதைத் தொடர்ந்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், குய்மோ பகுதியைச் சேர்ந்த ஜுபார் அகமது பாதர் என்பவர், அந்தக் குழுவின் முக்கிய நபராகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
    அதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்ததில், அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற 6 பேரின் விவரங்கள் தெரியவந்தது. பின்னர், அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜுபார் அகமது பாதரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 3 துப்பாக்கிக் குண்டுகள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai