சுடச்சுட

    

    சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

    By DIN  |   Published on : 28th March 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkiah_naidu

    சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களில் காலியாக இருக்கும் இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
    நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையங்களில் காலியாக இருக்கும் இடங்களை மத்திய அரசு நிரப்பாமல் தாமதம் செய்வதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
    பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகிய சமூகங்களைச் மக்களின் நலன்கள் மீது மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலனை கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக மாற்றும் வகையில், அதற்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு விரும்புகிறது.
    பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருவதை எதிர்க்கட்சிகள் பாராட்டாமல் எதிர்மறையான விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் அல்லது தாழ்த்தப்பட்டோர் நல ஆணையங்களாக இருந்தாலும் சரி, அங்கு காலியாக இருக்கும் இடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். அதை தாமதம் செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது.
    அந்த ஆணையங்களின் அலுவலகங்கள் தற்போதும் செயல்பட்டு கொண்டுதான் உள்ளன. அந்த ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரைதான் நியமிக்க வேண்டியுள்ளது. அதாவது, அந்த நியமனங்கள் அனைத்தும் அரசியல் சம்பந்தப்பட்ட நியமனங்கள் ஆகும். புதிய அரசு பதவியேற்கும்போது, அந்தப் பதவிகளில் புதியவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai