Enable Javscript for better performance
தமிழக விவசாயிகள் கோரிக்கை குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவோம்: தம்பிதுரை- Dinamani

சுடச்சுட

    

    தமிழக விவசாயிகள் கோரிக்கை குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவோம்: தம்பிதுரை 

    By  புதுதில்லி,  |   Published on : 28th March 2017 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dhambidurai

    தமிழக விவசாயிகள் கோரிக்கை குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உறுதியளித்துள்ளார்.

    தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர்  இன்று சந்தித்தனர். பின்னர் செய்தியளார்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக விவசாயிகள் கோரிக்கை குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவோம்.

    விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக மீண்டும் மத்திய உள்துறை, வேளாண் அமைச்சர்களை சந்திப்போம். விவசாயிகளின் துயரை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அவ்போது வலியுறுத்துவோம். மத்திய அரசின் நிதிஒதுக்கீடு யானைப்பசிக்கு சோளப்பொரி என்பதைப்போல நிவாரணம் உள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai