சுடச்சுட

    

    தில்லியில் பலாத்கார வழக்குகள் குறைந்தது; கொலை வழக்குகள் அதிகரித்தது!

    By புதுதில்லி  |   Published on : 28th March 2017 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டின் முதல் 3 மாதங்களில் பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. அதேவேளையில், கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தில்லி காவல்துறையிடம் உள்ள தகவல்களின்படி, நிகழாண்டின் முதல் காலாண்டில் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 376 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 403 வழக்குகள் பதிவாகின. இதேபோல, கொலை, கொலை முயற்சி தொடர்பாக கடந்த ஆண்டில் 97, 114 வழக்குகள் பதிவான நிலையில், நிகழாண்டில் 103, 123 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள், 3,103 என்ற எண்ணிக்கையில் இருந்து 2,421-ஆக குறைந்துள்ளன. சிறுமிகள் கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 676 வழக்குகள் பதிவாகின. ஆனால், நிகழாண்டில் அதைவிட அதிக எண்ணிக்கையில் 687 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    வரதட்சிணை கொடுமை சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை, 29-இல் இருந்து 31-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக குற்றச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 36,780 வழக்குகள் பதிவாகின. ஆனால், நிகழாண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து 52,109-ஆக உள்ளது. திருட்டு, வழிப்பறி வழக்குகளை பொருத்தவரை, கடந்த ஆண்டு 1,197 மற்றும் 2,164 என்ற எண்ணிக்கையில் பதிவாகின. நிகழாண்டு இந்த எண்ணிக்கை 683, 1,798 என்ற அளவில் குறைந்துள்ளன.

    வாகனத் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கையும் (கடந்த ஆண்டு-7,911, நிகழாண்டு-7,811) குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டில் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. விபத்துகள் தொடர்பாக கடந்த ஆண்டு 1,224 வழக்குகள் பதிவான நிலையில் நிகழாண்டில் 1,164 வழக்குகளே பதிவாகியுள்ளன.

    தில்லி காவல்துறை ஆணையராக இருந்த அலோக் குமார் வர்மா, மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய ஆணையராக அமுல்ய பட்னாயக் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai