Enable Javscript for better performance
தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பு: பிரணாப் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    
    pranap

    தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான உகாதி பண்டிகை புதன்கிழமை (மார்ச் 29) கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
    மராத்தியர்களின் வருடப் பிறப்பான குடி பட்வா, காஷ்மீர் பண்டிட்டுகளின் புத்தாண்டான நவ்ரே உள்ளிட்டவையும் புதன்கிழமை கொண்டாடப்படுகின்றன. இதனை முன்னிட்டு பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
    நாட்டு மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகை என்பது எப்போதும் புதிய வளர்ச்சி, புதிய நம்பிக்கை, புதிய உற்சாகத்தின் பிறப்பிடமாக இருக்க வேண்டும்.
    இந்தியர்கள் அனைவரது மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஏற்பட வேண்டுமென்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மக்களிடையே சகிப்புத்தன்மையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பான்மையும் பெருக வேண்டும். அமைதியும், நட்புறவும் தேசமெங்கும் ஏற்பட வேண்டுமென்று அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai