சுடச்சுட

    

    பஞ்சாபில் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    இதுதொடர்பாக, எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: குருதாஸ்பூர் நகரையடுத்த பஹாரிபூரிலுள்ள சர்வதேச எல்லையில் திங்கள்கிழமை காலை சந்தேகத்துக்கிடமான வகையில் மர்ம நபரொருவர் ஊடுருவ முயன்றார்.
    பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், அவர் மீண்டும் ஊடுருவ முயன்றார். இதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நபர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். மேலும், வேறு யாரேனும் அங்கு பதுங்கியுள்ளனரா என்று சோதனை நடத்தினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai