சுடச்சுட

  

  பெண்ணின் 27 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

  By DIN  |   Published on : 28th March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்ணின் 27 வாரகால கருவைக் கலைப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளிக்க திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
  உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது 27 வாரகால கருவைக் கலைப்பதற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது உச்ச நீதிமன்றத்தில், அந்தப் பெண் மற்றும் அவரது கருவைப் பரிசோதித்துவிட்டு மருத்துவர்கள் அளித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடுகையில், 'பெண்ணின் உடல்நிலையைப் பரிசோதித்து விட்டு, மும்பையைச் சேர்ந்த கே.இ.எம். மருத்துவமனை அளித்த அறிக்கையில், 27 வாரகால கருவின் நிலை மிகவும் அசாதாரணமானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இதனால் அந்தக் கருவைக் கலைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை' என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
  மருத்துவர்களின் அறிக்கையில், பெண்ணின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவரது உடல்நலனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கருவைப் பரிசோதித்த மருத்துவர்கள், தற்போதைய நிலையில், அதைக் கலைத்தால், அது உயிருடன் பிறப்பதற்கே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, கருவைக் கலைக்க மனுதாரருக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  இந்தியாவில் தாய் மற்றும் கருவுக்கு ஆபத்தில்லாதபட்சத்தில், 20 வாரத்துக்கும் அதிக காலமுடைய கருவைக் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி உரிய காரணத்தைத் தெரிவித்து கருவைக் கலைப்பதற்கு அனுமதி பெற முடியும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai