சுடச்சுட

  

  விவசாயிகள் தற்கொலை விவகாரம்: மத்திய அரசின் செயல்திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

  By DIN  |   Published on : 28th March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகள் தற்கொலையைத் தடுத்து நிறுத்த மாநில அரசுகளிடம் மத்திய அரசு பரிந்துரைத்த செயல்திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
  குஜராத் மாநிலத்தில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதால், அவர்களது அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க அந்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
  இந்த மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கையை குஜராத் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தியது.
  இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:
  விவசாயிகள் தற்கொலை என்பது மிகவும் அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் ஆகும்.
  இந்த விவகாரத்தில் மத்திய அரசால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்றாலும், விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, விவசாயிகள் தற்கொலைகளைத் தடுப்பதற்காக மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பரிந்துரைகள் மேற்கொள்ள வேண்டும்.
  அவ்வாறு இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் குறித்த விவரங்களை மத்திய அரசு இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
  அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா கூறுகையில், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் வகையில், அவர்களிடமிருந்து விளைபொருள்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வது, காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது, பயிர்க் கடன் மற்றும் பயிர் இழப்பீடு ஆகிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகத் தெவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai