சுடச்சுட

  

  அடுத்த ஜனாதிபதி போட்டியில் நானா? ஆர்.எஸ்.எஸ் தலைவரின் 'அடடே' பதில்!

  Published on : 29th March 2017 03:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rss_chief

   

  நாக்பூர்: இந்தியாவுக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் போட்டியில் தன்னுடைய பெயர் இருப்பதாக வெளியான தகவலை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதியாக மறுத்துள்ளார்.

  பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பாகச் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்.இதன் தலைவராக இருப்பவர் மோகன் பகவத். தற்போதைய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் பதிவிக்காலம் வரும் ஜுலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அடுத்த ஜனாதிபதி யார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

  இந்நிலையில் சிவ சேனா கட்சியின் எம்.பியான சஞ்சய் ராவத் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பொழுது, அடுத்த ஜனாதிபதி பதவிக்கு பகவத்தின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது என்றும், அவர் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

  அதைத் தொடர்ந்து ஒரு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இதுகுறித்த தனது நிலையை தெளிவுபடுத்தியிருந்தார்.  

  ஜனாதிபதி  தேர்வுக்கு என்னுடைய பெயர் பரிந்துரைக்கபபடவே இல்லை. அப்படியே  பரிந்துரைக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்பதாக இல்லை. ஊடங்களில் வெளிவருவது  எல்லாம் வெறும் கேளிக்கை செய்தி.

  சங் பரிவார் அமைப்பின் ஒரு உறுப்பினராக என் அமைப்பிற்காகவும், சமூகத்திற்காகவும் என்னுடைய வாழ்க்கையை அர்பணித்துள்ளேன்,.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளாருக்கு ஆதரவு கோரி, கூட்டணி எம்.பிக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி இன்றிரவு விருந்தளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai