சுடச்சுட

  
  ops18

  சென்னை: ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கும் முயற்சியில் ஓபிஎஸ் அணி தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

  சசிகலாவின் குடும்ப சொத்தாக நமது எம்ஜிஆர், ஜெயா டிவி போன்றவை உள்ளதால் அவற்றில் ஓபிஎஸ் அணி உரிமை கோருவதில் சிக்கல் உள்ளதால், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்ற கட்சியின் பெயரில் இயங்கும் ஓபிஎஸ் அணி தங்களுக்கான ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம். அதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன்  ஒளிபரப்புக்கு தயாராக உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

  விரைவில் வெளிவரும் அம்மா டிவி முன்னாள் அமைச்சர் ஒருவரின் நிறுவனத்திலிருந்து செயல்படவுள்ளதாகவும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பும் வகையில் தீவிரமாக ஓபிஎஸ் அணி செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் அம்மா டிவியின் அம்சத்தை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai