சுடச்சுட

    

    இரண்டு ஆண்டுகளுக்கு பின் குஜராத் சட்டசபைக்கு செல்கிறார் அமித் ஷா

    By DIN  |   Published on : 29th March 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amithsha

    அகமதாபாத்: குஜராத் மாநிலம் நாரன்புரா சட்டப்பேரவை உறுப்பினரான பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இரண்டாண்டுகளுக்கு பின்னர் வரும் நாளை 30-ம் தேதி பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளார்.

    பாஜக தேசிய தலைவரான அமித் ஷா குஜராத் மாநிலம் நாரன்புரா சட்டப்பேரவை தொகுதியில் இருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு தேந்தெடுக்கப்பட்டவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித் ஷா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக-வின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கட்சிப்பணி காரணமாக பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்த அமித் ஷா, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வரும் நாளை 30-ஆம் தேதி பேரவைக்கு செல்கிறார். கடைசியாக 2015-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி அவர் பேரவை நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளார்.

    பேரவை உறுப்பினர்களை பொறுத்த வரை 6 மாதங்கள் வரை பேரவை நடவடிக்கைகளில் இருந்து விடுப்பு எடுக்க முடியும் என்ற விதி இருந்தாலும், தகுந்த காரணங்களை கூறி விடுப்பை மேலும் நீட்டிக்க முடியும் என அம்மாநில பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai